என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று சுட்டெரித்த வெயில்- 103 டிகிரி வெப்பம் பதிவு
- வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் சதம்.
- வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கடலூரில் 102.56 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி, மதுரையில் 100.4 டிகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியில் தலா 100.4 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
Next Story






