என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூரில் ரவுடி கொட்டுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை - கூட்டாளிகள் 6 பேர் கைது
- உதவி ஆய்வாளர் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு கொட்டுராஜா தப்பியோட முயன்றார்.
- காயமடைந்த எஸ்ஐ சங்கர், காவலர் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி கொட்டுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடந்த 24-ந்தேதி ரவுடி வெள்ளைக் காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி கொட்டுராஜாவை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
உதவி ஆய்வாளர் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு கொட்டுராஜா தப்பியோட முயன்றார். அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் கொட்டுராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
ரவுடி கொட்டுராஜா அரிவாளால் தாக்கியதில் காயமடைந்த எஸ்ஐ சங்கர், காவலர் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வெள்ளைக்காளியை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக ரவுடிகள் 6 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.






