என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்
    X

    காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதையடுத்து ஓரிரு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வருகிற 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×