என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்து நடந்த போது ரெயில்வே கேட் மூடப்படவில்லை- நேரில் பார்த்த பயணி அதிர்ச்சி தகவல்
- 2 பள்ளி மாணவர்கள் உடல் சிதறி இறந்த நிலையில் கிடந்தனர்.
- ரெயில் விபத்து ஏற்பட்டதை பார்க்கும் போது ரெயிலில் இருந்தவர்களும் தப்பித்தது பெரும் அதிர்ஷ்டம்தான்.
பள்ளி வேன் மீது மோதிய பயணிகள் ரெயிலில் பயணம் செய்த அரசூரை சேர்ந்த செல்வமணி சம்பவம் குறித்து அதிர்ச்சியுடன் கூறியதாவது:-
சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் இன்று காலை சென்று கொண்டிருந்தேன் அப்போது கடலூர் அடுத்த செம்மங்குப்பம் பகுதியில் ரெயிலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பலத்த சத்தம் கேட்டு ரெயில் முழுவதும் கடும் புகை மூட்டமாக காட்சியளித்தது.
மேலும் ரெயிலில் அனைத்து மின்விளக்குகள், மின் விசிறிகள் செயல்படாமல் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்து வெளியில் பார்த்தபோது ரெயில்வே கேட் திறந்து இருந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஒரு பள்ளி வேன் உருக்குலைந்து சிதறி காணப்பட்டது. மேலும் 2 பள்ளி மாணவர்கள் உடல் சிதறி இறந்த நிலையில் கிடந்தனர். மேலும் ஒரு சிலர் காயம் அடைந்து காணப்பட்டனர். ஆனால் இந்த ரெயில் விபத்து ஏற்பட்டதை பார்க்கும் போது ரெயிலில் இருந்தவர்களும் தப்பித்தது பெரும் அதிர்ஷ்டம்தான் என கூறலாம். ஏனென்றால் சுமார் 100 அடிக்கு மேல் வேனை இழுத்து சென்றது.
இவ்வாறு அவர் கூறினார்.






