தி.மு.க. கூட்டணிக்கு புரட்சி அ.தி.மு.க. ஆதரவு: புகழேந்தி அறிவிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரின் ஆதரவாளராக இருந்தார்.ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்ததை விமர்சித்து, தனிக்கட்சி தொடங்கினார்.
தி.மு.க. கூட்டணிக்கு புரட்சி அ.தி.மு.க. ஆதரவு: புகழேந்தி அறிவிப்பு
Published on

சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அ.ம.மு.க.-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார்.

பின்னர் டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார். சமீபத்தில் ஓ.பி.எஸ். திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் தமிழக சட்டசபை தேர்தலில் புரட்சி அதிமுக திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என புகழேந்தி தெரிவித்தார். அத்துடன் திமுக கூட்டணியை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com