என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்
    X

    பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்

    • முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். அந்த வகையில், வருகிற 13ம் தேதி பவுர்ணமி தினத்தையோட்டி ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பவுர்ணமி கிரிவலத்தையொட்டி வருகிற 13ம் தேதி காலை 9.25 மணிக்கு (ரெயில் எண் 06130) விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் புறப்படும் எனவும், மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதே நாள் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×