என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது - உச்சநீதிமன்றம்
- பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
- ரு வாரத்துக்குள் பதிலை தாக்கல் செய்யவும் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு
சிலை கடத்தல் வழக்கில் காவல்துறை முன்னாள் அதிகாரி பொன் மாணிக்கவேலின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.
அப்போது சிலை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான தீனதயாளன் என்பவரை வழக்கில் இருந்து தப்பவைக்க உதவியதாக சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பொன் மாணிக்கவேலின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரியும் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக ஊடகங்களில் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிப்பதால் விசாரணை தடைபடுவதாகவும் சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், சிபிஐ விசாரணை தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு பேட்டி அளிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலை தாக்கல் செய்யவும் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.






