என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போவாங்க... வருவாங்க... ரிப்பீட் மோடில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
- அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
- பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் செயல்பாட்டைப் பொறுத்து மாற்றினேன்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து நேற்று மாவட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அன்புமணி, "ராமதாஸ் எங்கள் குலதெய்வம்" என்று தெரிவித்தார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது போவாங்க, வருவாங்க என்று ரிப்பீட் மோடில் ராமதாஸ் திரும்ப திரும்ப பேசியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நீங்கள் கூட்டிய கூட்டத்திற்கு வராமல் அன்புமணி கூட்டிய கூட்டத்திற்கு பெரும்பாலானோர் கலந்து கொண்டார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், "போவாங்க, வருவாங்க... வருவாங்க, போவாங்க... போவாங்க, வருவாங்க... ஒருத்தர் போவாரு ... இன்னொருத்தர் வருவாரு ... இன்னொருத்தர் போவாரு... இன்னொருத்தர் வருவாரு... ஒவ்வொருவரின் செயல்பாட்டை பொறுத்து மாற்றுவோம்" என்று தெரிவித்தார்.






