என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விசுவாசத்துக்கு ஓ.பி.எஸ்.: துரோகத்திற்கு அடையாளமாக பழனிசாமி- #MK Stalin
    X

    விசுவாசத்துக்கு ஓ.பி.எஸ்.: துரோகத்திற்கு அடையாளமாக பழனிசாமி- #MK Stalin

    • கூவத்தூரில் அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு,
    • அந்த அம்மையாரை நோக்கியே, நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா? என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி.

    ஓ. பன்னீர் செல்வம் சில தினங்களுக்கு முன்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார். இன்று அவருடைய ஆதரவாளர்கள் திமுக-வில் இணையும் பிரமாண்ட விழா மதுரை திருமங்கலத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நீங்கள் மட்டுமல்ல, நானும் ரசிகன்தான். கழகம் எம்.ஜி.ஆரை வளர்த்தது. அவரும் கழகத்தை வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட தாய்க்கழகத்திற்கு- தாயின் மடிக்கு நீங்கள் எல்லாம் திரும்பி இருக்கிறீர்கள்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க., யாருக்கோ அடிமை சேவகம் செய்யப்போனதால், உரிமைக்குரல் எழுப்பித் தாய்க்கழகத்திற்குத் திரும்பி இருக்கிறீர்கள். தடம் மாறாமல், திராவிடப் பாதையில் பயணத்தை தொடரும் உங்களை எல்லாம் நான் வருக… வருக… வருக என்று வரவேற்கிறேன்.

    பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள இயக்கம், அவரையும்- அவரது கொள்கைகளையும் மறந்து, துரோகத்தின் முழு உருவம் ஆனதால், பேரறிஞர் அண்ணா தொடங்கிய இயக்கத்திற்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். சுயமரியாதையின் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணாவின் தம்பியாக- கலைஞரின் உடன்பிறப்பாக – உங்களை எல்லாம் வருக! வருக! என்று மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.

    அமைதியும்- புன்னகையும் மட்டுமல்ல, ஓ.பி.எஸ். என்று சொன்னால், ஞாபகத்திற்கு வருகின்ற ஒரே சொல், விசுவாசம்!. மறைந்த அம்மையார் ஜெயலலிதா, தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில், நம்முடைய ஓ.பி.எஸ்.-ஐ இரண்டு முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை, எந்தத் துரோகமும் இல்லாமல், திருப்பி ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர்தான் ஓ.பி.எஸ்.. அதனால்தான், அம்மையார் ஜெயலலிதாவே, சகோதரர் ஓ.பி.எஸ்.-ஐ பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

    விசுவாசத்துக்கு ஒரு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர்தான் பழனிசாமி அவர்கள். கூவத்தூரில், அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு, அந்த அம்மையாரை நோக்கியே, "நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா?" என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி. அவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று நம்முடைய சகோதரர் ஓ.பி.எஸ்.க்கு நன்றாகத் தெரியும்!

    பழனிசாமி-யை பொறுத்தவரைக்கும், தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். அவருடைய உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவாக்கி, அம்மையார் ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார் பழனிசாமி.

    பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றால், பா.ஜ.க. தனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறார். உண்மையில், பா.ஜ.க. யாருக்கும் நல்லது செய்யாது! இன்றைக்குக் கூட செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... நாளைக்கு மகளிர் தினத்தை அடிப்படையாக வைத்து, இன்றைக்கு சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி, மகளிருக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.

    Next Story
    ×