என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
    X

    அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

    • கர்நாடகா - கோவா கடற்கரையில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

    தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * மத்திய அரபிக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    * கர்நாடகா - கோவா கடற்கரையில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.

    * குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×