என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி- நத்தம் விஸ்வநாதன்
- தி.மு.க.வினரே இந்த ஆட்சியின் மீது கடும் அதிர்ச்சியுடன் இருந்து வருகிறார்கள்.
- அ.தி.மு.க.வை போன்று தி.மு.க. பலமான கட்சி கிடையாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
தி.மு.க.வினரே இந்த ஆட்சியின் மீது கடும் அதிர்ச்சியுடன் இருந்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை போன்று தி.மு.க. பலமான கட்சி கிடையாது.
எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். அடுத்த ஒரு வருடம் சுறு சுறுப்புடன் நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். விளையாட்டு அணி உட்பட அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கு தயாராகிவிட்டார்கள்.
வருகிற தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் புதிய ஆட்சி அமையும்.
இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.






