என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரி கண்காட்சியை காண குவிந்த கூட்டத்தை காணலாம்.
மதுரையில் நாளை முருக பக்தர்கள் மாநாடு - ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் கந்தசஷ்டி கவசம் பாட ஏற்பாடு
- முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
- மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது.
மதுரை:
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன. அறுபடை கோவில் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் முருகப்பெருமானை தரிசிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை, மாநாட்டில் மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கானோர் இணைந்து பாடி கின்னஸ் சாதனையும் படைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.






