என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமே இலக்கு:  உலக புத்தொழில் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமே இலக்கு: உலக புத்தொழில் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தொழில் மாநாடுகள் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சான்று.

    * தொழில்துறை வளர்ந்தால் அந்த மாநிலமும் தொடர்ந்து வளர்கிறது என அர்த்தம்.

    * அமைதியான மாநிலங்களை தேடியே தொழில்துறையினர் தொழில் தொடங்க வருவர்.

    * தி.மு.க. ஆட்சியில் ஏராளமான தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ளோம்.

    * தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    * 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

    * 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    * 2 ஆயிரமாக இருந்த புத்தொழில் நிறுவனங்கள் 12 ஆயிரமாக உயர்ந்துள்ளன.

    * சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலங்களைத்தான் தொழில் நிறுவனங்கள் தேடி வரும்.

    * தமிழ்நாட்டில் முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 33 சதவீதம் புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்கின்றன.

    * தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    * உலகில் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×