என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இங்கிலாந்து அமைச்சரை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்
    X

    இங்கிலாந்து அமைச்சரை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்

    • தமிழ்நாடு- இங்கிலாந்து கூட்டாண்மையை ஆழப்படுத்த இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின்வெஸ்ட்-ஐ சந்தித்தேன்.
    • பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அழைத்தேன்.

    சென்னை :

    இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சரை சந்தித்தது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-



    லண்டனில், தமிழ்நாடு- இங்கிலாந்து கூட்டாண்மையை ஆழப்படுத்த இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின்வெஸ்ட்-ஐ சந்தித்தேன்.

    பசுமைப்பொருளாதாரம், கல்வி, ஆராய்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் இணைப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொருள் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாடு வலுவாக உள்ளதை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். மேலும் நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அழைத்தேன் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×