என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயிலில் வேலூர் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்
- சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.
- வேலூர் நகருக்கு வரும் முதலமைச்சருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று, நாளை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக இன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் சென்றடையும்.
ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அங்கிருந்து காரில் வேலூர் நகருக்கு வரும் அவருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.






