என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது அடிமைத்தனம் - சேகர்பாபு
- ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
- மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.
சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் 71,000 கோவில்கள் இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
* ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
* சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும். அதன்பின் பேசட்டும்.
* பா.ஜ.க.வினருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டது அ.தி.மு.க.
* பெரியார், அண்ணா மட்டுமின்றி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரைதான் அண்ணாமலை வசைபாடி உள்ளார்.
* அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது.
* யார் பலம் வாய்ந்தவர்கள்? என நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுகிறது.
* நயினார் நாகேந்திரன் பச்சைத்துண்டுடனும், அண்ணாமலை காவி துண்டுடனும் சுற்றுகின்றனர்.
* மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.
* அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






