போரூர் - வடபழனி இடையேயான மெட்ரோ ரெயிலின் முதற்கட்ட சோதனை வெற்றி - வீடியோ வெளியிட்ட CMRL

பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க திட்டம் போரூர் - வடபழனி வழித்தடத்தில் நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
போரூர் - வடபழனி இடையேயான மெட்ரோ ரெயிலின் முதற்கட்ட சோதனை வெற்றி - வீடியோ வெளியிட்ட CMRL
Published on

சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது .

பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், போரூர் - வடபழனி வழித்தடத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோவை சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com