என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடுத்த மாதம் புதிய கட்சியை தொடங்கும் மல்லை சத்யா
- அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்.
- நாங்கள் புதிதாக தொடங்க இருக்கும் கட்சி பெயரில் நிச்சயம் திராவிடம் இருக்கும்.
சென்னை:
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக கட்சி பெயரை முடிவு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடி அறிமுகம் செய்து விட்டோம். அதில் இடம் பெற்றுள்ள 7 ஸ்டார்களும் 5 திராவிட இயக்க தலைவர்களையும் அகில இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கர், உலக அளவில் காரல் மார்க்ஸ் ஆகியோரை குறிக்கும்.
கட்சியின் தொடக்க விழா அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி அடையாறில் நடக்கிறது. அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். இந்த நாள்தான் நீதிக்கட்சி உருவாக அடித்தளம் அமைத்த தென்னிந்திய நல உரிமைகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள். (20-11-1916). எனவே இந்த நாளை தேர்வு செய்தோம். அதில் இருந்துதான் திராவிட கட்சிகள் அனைத்தும் தோன்றியது.
நாங்கள் புதிதாக தொடங்க இருக்கும் கட்சி பெயரில் நிச்சயம் திராவிடம் இருக்கும். திராவிடர்களுக்கு சேவை செய்ய திராவிட இயக்கங்களால்தான் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






