அடுத்த ஆண்டு நவம்பரில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அடுத்த ஆண்டு நவம்பரில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய விண்வெளி துறையில் இன்று முக்கியமான நாள். 33 கட்டுமானங்களுக்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதற்கான இடத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com