என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணாவின் கொள்கைகளை தி.மு.க. குழிதோண்டி புதைத்து வருகிறது - ஜெயக்குமார்
- தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தின் பல முக்கிய மாநில உரிமைகள் தாரை வார்க்கப்பட்டன.
- பறிபோன உரிமைகளுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து, அவற்றை மீட்டெடுத்துக் காட்டியவர் ஜெயலலிதா.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலும், கோடிக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களின் இதயங்களிலும் அவர் வாழ்ந்து வருகிறார்.
"தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தின் பல முக்கிய மாநில உரிமைகள் தாரை வார்க்கப்பட்டன. காவிரி நதிநீர் விவகாரமாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பறிபோன அந்த உரிமைகளுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து, அவற்றை மீட்டெடுத்துக் காட்டியவர் ஜெயலலிதா.
அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் தி.மு.க., அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்து வருகிறது."
அ.தி.மு.க. ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம். எல்லோரும் சமம் என்பதே எங்கள் கொள்கை. அதே சமயம், கோவில்களில் காலங்காலமாக என்ன மரபுகள் (ஆகம விதிகள்) பின்பற்றப்படுகிறதோ, அந்த நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து கூற இயலாது."
இவ்வாறு அவர் கூறினார்.






