என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தென்னிந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
- தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
- கேரளாவில் வருகிற 27-ந்தேதி வாக்கில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை மையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், கேரளாவில் வருகிற 27-ந்தேதி வாக்கில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது.
Next Story






