என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்றும், நாளையும் உஷார்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை.
- மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி வருகிற 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
2 தினங்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.






