என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது- யூடியூபர் இர்பான்
    X

    எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது- யூடியூபர் இர்பான்

    • குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது.

    யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தமிழக சுகாதாரத்துறை இர்பானுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பினாலும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    ஆளும் திமுகவுடன் இர்பான் நெருக்கமாக உள்ளதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

    இதற்கு விளக்கம் அளித்து இர்பான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது மட்டுமே, அதற்காக என்னை எப்படி அவர்கள் ஆதரிப்பார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், இந்த சம்பவங்களை பொருத்தவரையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் செயல்படுகிறது. தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    Next Story
    ×