சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் நான் அல்ல- பட்டிமன்ற பேச்சாளர் ராஜா விளக்கம்

செட்டிநாட்டு சமையலை அடிப்படையாக வைத்து செட்டிநாடா என்றுதான் கேட்டேன்.தமிழ்ச்சாதி என்பதை மட்டுமே பெருமையக கருதுபவவவன் நான்.
சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் நான் அல்ல- பட்டிமன்ற பேச்சாளர் ராஜா விளக்கம்
Published on

அமெரிக்காவில் உணவு உபசரித்த தமிழ் பெண்ணிடம் சாதியைக் கேட்டதாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், ராஜாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில், ராஜா விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவனல்ல நான்.

எந்த ஊர் என்று கேட்டதற்கு காரைக்குடி என்று சொன்னவரிடம் செட்டிநாடா என்று கேட்டதாகவே நியாபகம்.

செட்டிநாட்டு சமையலை அடிப்படையாக வைத்து செட்டிநாடா என்றுதான் கேட்டேன்.

தமிழ்ச்சாதி என்பதை மட்டுமே பெருமையக கருதுபவவவன் நான்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com