என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ... கண் கலங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்
    X

    எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ... கண் கலங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்

    • கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 3 தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றேன்.
    • எல்லோருக்கும் எல்லாம் என்பது வாய் வார்த்தை அல்ல.

    தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் திமுக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், "ஓலை குடிசையில் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான், கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 3 தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றேன்.. திமுக ஆட்சிக்கு வந்த போது, டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று இருந்தோம்.

    எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ.. அந்த ஜாதியில் பிறந்த என்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக்கினார்.

    எல்லோருக்கும் எல்லாம் என்பது வாய் வார்த்தை அல்ல. அதன் வழியில் எளியவனான எனக்கு ஸ்டாலின் உயர்கல்வித்துறையை அளித்திருக்கிறார். இது அம்பேத்கர் கொள்கைக்கு கிடைத்த வெற்றி" என்று தெரிவித்தார். அப்போது உணர்ச்சி மிகுதியில் அமைச்சர் கோவி செழியன் கண் கலங்கினார்.

    Next Story
    ×