என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
    X

    தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    • தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4 -ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4 -ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×