என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆந்திராவில் கூகுள் AI மையம்: அதிமுக- திமுக மோதல்; ஷார்ப் பதில் அளித்த சந்திரபாபு நாயுடு மகன்
    X

    ஆந்திராவில் கூகுள் AI மையம்: அதிமுக- திமுக மோதல்; ஷார்ப் பதில் அளித்த சந்திரபாபு நாயுடு மகன்

    • ஆந்திராவில் 15 பில்லியன் டாலரில் கூகுள் ஏஐ மையம்.
    • திமுக இதை தமிழகத்திற்கு கொண்டு வர தவறிவிட்டது என அதிமுக குற்றச்சாட்டு.

    உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்த நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் சுமார் 1.32 லட்சம் கோடி) மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது.

    "கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நம்முடைய மதுரை மன்னின் மைந்தர். உலகளாவிய அளவில், தொழில்நுட்பத்துறையில் புட்சியை ஏற்படுத்தி வருகிறார். அவரை அணுகி முறைப்படை அழைப்பு கொடுத்திருந்தால் தமிழகத்திற்கு இந்த மையம் வந்திருக்கும். 15 பில்லியன் டாலர் அளிவலான முதலீட்டை இந்த திமுக அரசு கோட்டை விட்டுள்ளது" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக செய்தி தொடர்பாள இளங்கோவன் "மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதில் பாஜக-வின் அழுத்தம் உள்ளது. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு எதிராக பாஜக உள்ளது" என்றார்.

    இதை ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வி. இன்று மதியம் பிளாஷ் நியூஸா எடுத்துக்கொண்டது. சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் கூட, ஆந்திராவை தேர்வை தேர்வு செய்துள்ளார் என்பது போன்று குறிப்பிட்டிருந்தது.

    இந்த நிலையில், என்.டி.டி.வி.யின் நியூசை ஸ்கீன்ஷாட் எடுத்த சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேஷ் "சுந்தர் பிச்சை பாரத்-ஐ (இந்தியா) தேர்வு செய்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×