என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்- எச்.ராஜா
    X

    12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்- எச்.ராஜா

    • முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும்.
    • வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை தான் இருக்கும்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிபதி சாமிநாதன் நேரடியாக சென்று பார்வையிட்டு வந்துள்ளார். இந்த அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.

    முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது டி.எஸ்.பி செல்வராஜ் என்பவர் வாகன விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்துக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

    வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை தான் இருக்கும். இதன் மூலம் தி.மு.க அரசை தூக்கி அடிப்போம். தமிழகத்தில் தி.மு.க அரசை துடைத்தெறிய வேண்டும்.

    வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.

    அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைவராக உள்ளார். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும். கடந்த 55 மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 6,700 கொலைகள் நடந்துள்ளது. வன்கொடுமைகளும் அதிகமாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×