என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

MK Stalin | பெண்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறார் - கவுதமி
- 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.
- விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.
கோவை:
கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகை கவுதமி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறுதிவரை பெண்களுக்காகவே வாழ்ந்தார்.
ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார். இதற்கு சாட்சி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராடிய பின்னர் 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மு.க.ஸ்டாலின் தனது ஆட்சி முடியும் தருவாயில் கொடுத்துள்ளார். அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பதற்காகத் தான் இப்போது கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விளாத்திகுளம் வன்கொடுமை, கொலை சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று கனிமொழி எம்.பி., கூறியிருப்பது மனிதத் தன்மையற்றது.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூட சொல்ல முடியாத நீங்கள் எப்படி உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக அறிக்கை தந்தவர்கள், விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்தத் தலைமுறையையும், அடுத்த இரண்டு தலைமுறைகளையும் நாசமாக்கி அழித்ததுதான்.
வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும், அது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும். மற்றவர்கள் இடையில் வந்த 'தொல்லைகள்' போன்றவர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






