உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு- கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது.தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு- கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேலுள்ள பஞ்சலிங்கம் சுவாமி கோவில் மற்றும் அருவி உள்ளது.

இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக திருமூர்த்திமலை மலை மேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com