என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் 5 சட்டமன்ற தொகுதி சுற்றுப் பயணம் விவரம்
- மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பெயரில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப் பயணம்
- ஞாயிற்றுக்கிழமை திருப்போரூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்கிறார்
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' என்ற தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, 28.12.2025 முதல் 30.12.2025 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
28.12.2025 – ஞாயிறு- திருப்போரூர், சோழிங்கநல்லூர்
29.12.2025 – திங்கள்- திருத்தணி, திருவள்ளூர்
30.12.2025 – செவ்வாய்- கும்மிடிபூண்டி
புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்' போது, சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள்
மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






