என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
    X

    தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

    • பூதலூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயல்களில் கதிரோடு சாய்ந்து கிடக்கின்றன.
    • முற்றிய நெல்மணிகள் முளைத்தும் காணப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தலைமடை பகுதியாக விளங்குவது பூதலூர் தாலுகா பகுதி. இந்த பகுதியில் குறுவை அறுவடை பணிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பூதலூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயல்களில் கதிரோடு சாய்ந்து கிடக்கின்றன. பூதலூர் கிராமத்தில் ஒரே இடத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடப்பதோடு, முற்றிய நெல்மணிகள் முளைத்தும் காணப்படுகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்த நெற் பயிரை முழுமையாக அறுவடை செய்ய இயலாத நிலையை எண்ணி விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    இந்நிலையில் தஞ்சையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    காட்டூர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார். மழையில் முளைத்த நெல்மணிகளை எடுத்து பார்த்து ஆய்வு மேற்கொண்ட அவர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    Next Story
    ×