என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை விசாரணைக்காக மீண்டும் அழைத்து சென்ற அமலாக்கத்துறை
- மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- நேற்று விசாகனை அழைத்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.
'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்றிரவு விசாரணை முடிவடைந்து விசாகன் அமலாக்கத்துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார்.
இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும், மின்வாரிய முன்னாள் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் வீடு மற்றும் அலுவலகத்திலும், சூளைமேட்டில் உள்ள வீடு, அண்ணா நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், பெசன்ட் நகர் பகுதியில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனை மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
நேற்று விசாகனை அழைத்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.
விசாகன் இல்லத்தில் சோதனை தொடரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாகனை மீண்டும் அழைத்து சென்றனர்.






