என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியங்களான டிஜிட்டல் ஆவணங்கள்
- இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பு அரசு வக்கீலாக சுரேந்திரகுமார் என்பவர் ஆஜரானார்.
- சமீபத்தில் தமிழ்நாட்டில் நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.
பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 8 பெண்கள் புகார் அளித்தனர்.
* கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி சபரி ராஜன் மற்றும் 2-வது குற்றவாளியான திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தான் கோர்ட்டில் முக்கிய சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டது.
* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் டிஜிட்டல் ஆவணங்கள் முக்கிய சாட்சியங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
* இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 2019 -ம் ஆண்டு முதல் ஜாமின் வழங்கப்படவில்லை.
* இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சியங்கள் யாரும் பிரல் சாட்சியங்களாக மாறவில்லை.
* பொள்ளாச்சி போலீஸ், சி.பி.சி.ஐ.டி, கடைசியாக சி.பி.ஐ போலீஸ் விசாரித்து வழக்கை நடத்தி, குற்ற பத்திரிகையையும் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
* இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பு அரசு வக்கீலாக சுரேந்திரகுமார் என்பவர் ஆஜரானார்.
* சமீபத்தில் தமிழ்நாட்டில் நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அந்த பட்டியலில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவியின் பெயரும் இருந்தது.
இருப்பினும் முக்கியமான இந்த வழக்கினை அவர் விசாரித்ததால், இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட பிறகு மறுஉத்தரவு வரும் வரை அவரே இந்த வழக்கின் நீதிபதியாக இருப்பார் என்று கூறப்பட்டது.
* காலை முதலே நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார், வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்திற்குள் கொண்டு சென்றனர்.
* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கூறப்பட உள்ளதை அடுத்து நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்றம் முன்பும் துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
* கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 வாசல்களிலும் போலீசார் தீவிர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்திற்குள் அனைவரையும் அனுமதித்தனர்.






