என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி- துணை முதலமைச்சர் பாராட்டு
    X

    ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி- துணை முதலமைச்சர் பாராட்டு

    • ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் சகோதரி முத்தமிழ்ச்செல்வி.
    • அவரைப்போல பலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் சகோதரி முத்தமிழ்ச்செல்வி. உயிரை பணையம் வைத்து இச்சாதனையை சாத்தியமாக்கி இருக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.

    ஒவ்வொரு மலையேற்றத்திற்கு முன்பும் நம்மை சந்தித்து அவரது அடுத்தடுத்த மலையேற்றம் குறித்த தகவல்களையும் அதில் உள்ள சவால்களையும் பகிர்ந்து கொள்வார். அவருடைய வெற்றிப்பயணத்திற்கு @SportsTN_ துணை நின்று வருகிறது என்பதில் பெருமை கொள்கிறோம்.

    தங்கை முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உயரங்களை தொட அவரைப்போல பலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    Next Story
    ×