என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீபாவளி சிறப்பு பஸ்கள் - கிளாம்பாக்கத்தில் வெளியூர் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரம்
    X

    தீபாவளி சிறப்பு பஸ்கள் - கிளாம்பாக்கத்தில் வெளியூர் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரம்

    • இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 760 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்களும், நாளை (18-ந்தேதி) 1935 சிறப்பு பஸ்கள், 19-ந்தேதி 1040 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரங்கள் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    1-வது நடைமேடை: நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை.

    2-வது நடைமேடை: திருநெல்வேலி, பாபநாசம், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை(டி.என்.எஸ்.டி.சி), திருநெல்வேலி(டி.என்.எஸ்.டி.சி).

    3-வது நடைமேடை: மதுரை, மதுரை கோட்டம், உசிலம்பட்டி, கீழக்கரை, திருமயம், காரைக்குடி, புதுக்கோட்டை, தேவகோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம், ஏர்வாடி, கீரமங்கலம், தொண்டி, பொன் அமராவதி, வீரசோழன், சிவகங்கை, பரமக்குடி, ஒப்பிலான்.

    4-வது நடைமேடை: திருச்சி, அன்னவாசல், ஊரணிபுரம், புள்ளம்பாடி, கரூர்,பொள்ளாச்சி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், தேனி, பழனி, கொடைக் கானல், போடி, மூணாறு, கம்பம், குமிழி, திண்டுக்கல்(டி.என்.எஸ்.டி.சி), தேனி(டி.என்.எஸ்.டி.சி), கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி.

    5-வது நடைமேடை: திருச்சி, பெரம்பலூர், துறையூர், அரியலூர், புதுக்கோட்டை, காரைக்குடி.

    6-வது நடைமேடை: சேலம், எர்ணாகுளம், குருவாயூர், ஊட்டி, ஓசூர், பெங்களூரு, கோயம்புத்தூர், நாமக்கல், மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம்(டி.என்.எஸ்.டி.சி), ஈரோடு(டி.என்.எஸ்.டி.சி), கோயம்புத்தூர்(டி.என்.எஸ்.டி.சி).

    7-வது நடைமேடை: கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம்.

    8-வது நடைமேடை: திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், அரியலூர்.

    9-வது நடைமேடை: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வடலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி.

    மேலும் பஸ் நிறுத்தம் பகுதியில் எல்லா இடங்களிலும் வழிகளை அறிந்து கொள்ள பெயர் பலகை, பாதுகாப்புக்காக சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் காத்திருப்பு அமருமிடம், உணவகங்கள், கடைகள், அவசர மருத்துவ பிரிவு, பிரீபெய்டு ஆட்டோ, கார் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் சிறப்பு பஸ்கள் குறித்து அமைச்சர் சிவசங்கரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர்கள், பயணிகளிடம் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கிளாம்பாக்கம் பஸ் நிலைய தலைமைச் செயலர் பிரின்ஸ்லி ராஜ்குமார், போக்குவரத்து தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×