என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    Gas Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்: நான் வாங்கித் தருகிறேன்- நயினார் நாகேந்திரன்
    X

    Gas Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்: நான் வாங்கித் தருகிறேன்- நயினார் நாகேந்திரன்

    • சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்.
    • இது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய்.

    அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. பெங்களூருவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்று முதல் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    குறிப்பாக சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தமிழக முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க பொய் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய். இது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய். ஒரு நபர் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, அடுத்த சிலிண்டர் வாங்க 20 நாட்கள் கழித்துதான் புக் செய்ய முடியும். வீடுகளில் ஒரு சிலிண்டர் 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை பயன்படுத்தப்படும். இன்னைக்கு சிலிண்டர் வாங்கி நாளைக்கு புக் செய்ய முடியாது. ஏனென்றால் நான் டீலர்.

    தட்டுப்பாடு என்பதெல்லாம் கிடையாது. புக் செய்து 20 நாட்கள் ஆகிவிட்டால் நான் உங்களுக்கு சிலிண்டர் தருகிறேன். எங்க வேண்டுமோ, அங்க தரச் சொல்கிறேன்.

    ஓட்டலில் உணவு வகைகளை குறைத்ததற்கும், சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் சம்பந்தம் கிடையாது. இந்தியாவில் பொருளாதார கட்டுப்பாடு, நெருக்கடி கிடையாது. கச்சா எண்ணெய் விலை கூடிய போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கூட்டப்படவில்லை.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×