என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை வடிவிலான பூக்கள்
    X

    கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை வடிவிலான பூக்கள்

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன.
    • டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் நடந்து வருகிறது. வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே நகர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் ஸ்டார், கிறிஸ்துமஸ் குடில்கள், பல்வேறு வண்ண அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட ஏராளமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால். தற்போதே பல்வேறு தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்துள்ளனர். அரையாண்டு விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன. குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிலுவை வடிவிலான பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன.

    சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் கொத்துக் கொத்துதாகபூத்துக் குலுங்கும் இப்பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    Next Story
    ×