தொடர் கனமழை - முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மையானது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2510 கனஅடியாக உயர்ந்துள்ளது.
தொடர் கனமழை - முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி
Published on

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மையானது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். வடகிழக்கு பருவமழையின்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழியும்.

சென்னை மற்றும் புறநகரில் பெய்து வரும் கனமழை காரணமாக, பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2510 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 33 அடியை தாண்டி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com