என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுக-வுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டசபைக்குள் வரமுடியும் என்பது காங்கிரஸ்க்கு தெரியும்: அமைச்சர் ரகுபதி
- திமுக அரசியல் கட்சி. இங்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும்.
- இதனால் அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்பமாட்டார்கள்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்க்கு கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அதிகப்படியான தொகுதி கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. இன்றைக்குள் முடிவு செய்ய திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இறுதியாக 29+2 ஒதுக்க தயாராக இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் த.வெ.க. உடன் காங்கிரஸ் திரைமறையில் பேசி வருவதாக செய்தி பரவி வருவது குறித்து அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரகுபதி கூறியதாவது:-
திரைமறையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பது அவரவர்கள் விட்டுக் கொண்டிருக்கின்ற கப்சாதான். வேறு ஒன்றும் கிடையாது. எங்களை பொறுத்தவரையில் தெளிவாக இருக்கிறோம். திமுக அரசியல் கட்சி. இங்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். இதனால் அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்பமாட்டார்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வர முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.






