என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணம்?
- மு.க.ஸ்டாலின் படுகர் இன பழங்குடியின மக்கள், திபெத்தியர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
- நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது.
5 நாள் சுற்றுப்பயணமாக உதகை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இந்த இல்லத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர், படுகர் இன பழங்குடியின மக்கள், திபெத்தியர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






