என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையின் பறவை மனிதர்.. தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்த ஜோசப் சேகர் மறைவு
    X

    சென்னையின் பறவை மனிதர்.. தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்த ஜோசப் சேகர் மறைவு

    • ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் சேகர்.
    • கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார்.

    சென்னையின் 'பறவை மனிதர்' என்று அறியப்படும் ஜோசப் சேகர் (73) புற்றுநோய் பாதிப்பால் நேற்று இரவு காலமானார்.

    தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்தவர் ஜோசஃப் சேகர்.

    ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் தங்கியிருந்தபோது சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத் தொடங்கினார்.

    காலப்போக்கில், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகள் அவரது இல்லத்துக்கு வந்து உணவு உண்டன.

    ஆரம்ப காலத்தில் 'கேமரா ஹவுஸ் சேகர்' என்று அழைக்கப்பட்ட அவர் அவரின் அசாதாரண சேவையால் பின்நாட்களில் 'பறவை மனிதர்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

    வாடகை வீட்டில் வசித்து வந்ததால் உரிமையாளர் ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்ய சொல்லவே கிளிகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால் தன் கேமரா சேமிப்புகளை மொத்தமாக விற்பனை செய்து அதனால் வரும் பணத்தில் கட்டடத்தை வாங்கலாம் என்கிற சேகர் நினைத்தார். ஆனால், அது கைகூடவில்லை.

    வீட்டை காலி செய்தபின் கடந்த 2 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளிக்க முடியாத வருத்ததையும் அவர் பதிவு செய்தார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார். இந்த சூழலில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×