என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
    X

    9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    • கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.
    • வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதேநேரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்து இருந்தது. நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×