என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
    X

    18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    • டிட்வா புயல் கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 250 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யத்திலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    டிட்வா புயல் கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் வடக்கு - வடமேற்காக நகர்ந்து வடதமிழகத்தை நெருங்கும். டிட்வா புயல் கரையை தொடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டிட்வா புயல் காரணமாக வடமாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×