என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
    X

    பக்தர்கள் செல்போன்களை வைக்க அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை படத்தில் காணலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

    • செல்போன்கள் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டு, தரிசனம் முடித்து வரும்வரை பக்தர்களின் செல்போன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
    • ஆண்டாள் கோவிலில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.

    ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் செல்போன்கள் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டு, தரிசனம் முடித்து வரும்வரை பக்தர்களின் செல்போன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு உள்ளேயும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு அறையில் வைக்க ஒவ்வொரு செல்போனுக்கும் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பாதுகாப்பு அறையில் செல்போனை வைத்து சென்றனர். ஆண்டாள் கோவிலில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×