என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது- அன்புமணி வாழ்த்து
- சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடைபெற்றது.
- சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
சென்னை:
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று ஆங்கில தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடைபெற்றது. 20-ந் தேதி அறிவியல் 25-ந் தேதி சமூக அறிவியல், 27-ந் தேதி தமிழ், 28-ந் தேதி இந்தி, மார்ச் 10-ந் தேதி கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. தேர்வுகளை எழுதும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Next Story






