என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆறுகளில் அணை கட்டுவது stroke-க்கு ஒப்பானது -  தண்ணீர் மாநாட்டில் சீமான் பேச்சு
    X

    ஆறுகளில் அணை கட்டுவது stroke-க்கு ஒப்பானது - தண்ணீர் மாநாட்டில் சீமான் பேச்சு

    • தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை
    • மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.

    கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.

    மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் மாநாடு நடைபெற்றது.

    தண்ணீர் மாநாட்டில் பேசிய சீமான், "கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. மக்களின் வாக்கு தரத்தை மாற்ற நினைக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு யாரும் போட்டியில்லை.

    தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை. ரத்தநாளம் போன்றது ஆறுகள்; அதில், அணை கட்டுவது ஸ்டோக்குக்கு ஒப்பானது. மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×