என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் வளர்ச்சி மற்றும் நல்லாட்சி அடிப்படையில் பாஜக தேர்தலை சந்திக்கும்: மத்திய அமைச்சர் சொல்கிறார்
- எங்களுடைய நோக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.
- அதுவே முதன்மையான நோக்கமாகும்.
வருகிற மார்ச்- ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என வியூகங்கள் அமைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சரான அர்ஜுன் ராம் மெக்வால் "நாங்கள் ஐந்து மாநில தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். எங்களுடைய நோக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. அதுவே முதன்மையான மற்றும் தலையாய நோக்கமாகும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி மற்றும் நல்லாட்சி அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வோம்" என்றார்.
பிரதமர் மோடி 23-ம் தேதி தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் கலந்த கொண்டு பேச இருக்கிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், தமிழக தேர்தலுக்கான பாஜக கட்சியின் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அர்ஜுன் ராம் மெக்வால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் வந்திருந்தார். அப்போது பாஜக கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.






