என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போரூர்- பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
    X

    போரூர்- பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

    • பூந்தமல்லி- போரூர் இடையே இரண்டு முறை சோதனை நடைபெற்றது.
    • தற்போது போரூர்- பூந்தமல்லி இடையே சோதனை நடைபெற்றது.

    போரூர்- பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு கட்ட சோதனையும் UP Line-ல் (பூந்தமல்லி- போரூர்) நடைபெற்றது. தற்போது நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனை Down line-ல் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்றது.

    Down line-ல் நடைபெறும் முதற்கட்ட சோதனை ஓட்டம் என்பதால் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்திலேயே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. மீண்டும் இதே வழியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெறும். போரூர்- பூவிருந்தவல்லி இடையிலான தூரம் 9.5 கி.மீ. ஆகும். போரூர்- பூவிருந்தவல்லி இடையே 10 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    போரூர்- பூந்தமல்லி மெட்ரோ பணிகளை அடுத்து போரூர்- பவர்ஹவுஸ், ஆலப்பாக்கம்- சென்னை வர்த்தக மையம் இடையிலான மெட்ரோ பணிகள் அடுத்தாண்டு ஜூலைக்கும் நிறைவு பெறும். கோடம்பாக்கம்- பனகல் பார்க் தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் அடுத்த இரு மாதங்களில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.

    Next Story
    ×