என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் வடமாநில தொழிலாளர்களிடம் விவரங்களை சேகரித்தபோது எடுத்த படம்.
வங்கதேசத்தினர் ஊடுருவல்? - திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்புகின்றனர்.
- வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூா்:
திருப்பூாில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்புகின்றனர். இதனால் வழக்கத்தைவிட திருப்பூர் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து போலீசார் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நிற்பவர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும் திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா? என்பது குறித்து வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.